கனடா பாசையூர் புனித அந்தோனியார் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடல் இன்று ஆடி 5ஆம் தேதி சனிக்கிழமை வழமை போல் Toronto Downsview Dells பூங்காவில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாசையூர் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இந்த ஒன்று கூடலை வெற்றிகரமாக நடாத்தி முடிப்பதற்கு தங்கள் ஒத்துழைப்பை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு இன்றைய ஒன்று கூடலில் சிறுவர்களுக்கான ஓட்டப் போட்டி இரண்டு பிரிவுகளும் பதின்ம வயதினருக்கான ஓட்டப் போட்டிகள் இரண்டு பிரிவுகளிலும் வளர்ந்தவர்களுக்கான போட்டிகள், ஐம்பது வயதிற்கு உட்பட்டவர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாகவும் இடம்பெற்றிருந்தன அவற்றோடு பெண்களுக்கான ஓட்டப் போட்டி இன்றைய ஒன்று கூடலுக்கு மகுடம் சூட்டி இருந்தது.
மேலும் கால்பந்தாட்டம், கயிறிழுத்தல் பாடல் நிகழ்ச்சி போன்றவையும் இடம்பெற்றன. பிரான்சிலிருந்து வந்திருந்த செல்வி சந்தனா, அழகான இரண்டு பாடல்களைப் பாடடி வந்திருந்த அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்திலாழ்த்தியது, நிகழ்ச்சியின் விசேட அம்சமாகும்.
இவற்றோடு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விடயம் இந்த உணவு வகைகளை வந்திருந்த ஒவ்வொரு குடும்பமும் பொறுப்புணர்வுடன் மைதானத்திற்கு எடுத்து வந்து எல்லோருடைய உணவுத் தேவையும் பூர்த்தி செய்து இருந்தார்கள் என்பது உண்மையில் பாராட்டுக்குரிய விடயமாகும். மிகவும் குதூகலமாகவும், மகிழ்ச்சி ஆரவாரத்துடனும் இடம்பெற்ற இந்த ஒன்று கூட மாலை 6 மணி அளவில் இனிதே நிறைவுற்றது.