அத்தோடு எமது ஊர்பற்றிய முக்கிய விடயங்கள், நிகழ்வுகள் குறிப்பாக எமமூரின் வரலாறு போன்ற தகவல்கள் அனைத்தையும், எம் தாய் மொழியாம் தமிழிலும், சர்வதேச மொழியான ஆங்கிலத்திலும் இயன்றவரை இத் தளத்தில் ஆவணப்படுத்தி எமது எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்வதே எனது நோக்கமாகும்.
எதிர்வரும் சில வாரங்களில் இத்தளத்தின் தமிழ்ப்பக்கங்கள் ஒரு பிரத்தியேக இணைப்பாக இயங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுவரை இவ் ஆங்கிலத் தளத்தில் இந்த அறிவித்தல் காணப்படும். மேலும் எவ்வித உள்நோக்கமோ எதிர்பார்ப்போ இல்லாமல் எமது ஊர் மக்களுக்காகவே இத்தளம் நிர்மாணிக்கப்பட்டு இயக்கப்படுகிறது.
ஆகவே உங்களிடம் இருக்கக்கூடிய எமது ஊா்பற்றிய தகவல்கள், புகைப்படங்கள், முந்தைய மரண அறிவித்தல்கள்( அமரத்துவம் எய்தியோரின் புகைப்படங்களுடன்) பிறந்த நாள், மண நாள் வாழ்த்துகள், பல்கலைக்கழகப் பட்டமளிப்பு அறிவித்தல்கள் போன்ற விடயங்களை கீழ்க்காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைப்பின் அவை, எதுவித கட்டணமும் இன்றி பிரசுரிக்கப்படும்.
முக்கியமாகத் தாயகத்திலிருக்கும் எமது சொந்தங்களின் நிகழ்வுகள் கட்டணமின்றிப் பிரசுரிக்கப்படும் போது அது அவர்களுக்குப் பேருதவியாக அமையும் என்பது எனது நம்பிக்கையாகும்.
இத்தளத்தின் மூலம் நிலத்திலும் புலத்திலும் வாழ்கின்ற பாசூர் மக்கள் அனைவரையும் ஓர் குடும்பமாக இணைத்து. எமது அடுத்த சந்ததியிடம் எமது வரலாற்றைத் திரிபற விட்டுச் செல்ல என் ஊர் மக்களாகிய உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் நம்பிக்கையுடன் வேண்டி நிற்கிறேன்.
இதுவரை இத்தளத்திற் தரவேற்றப்பட்டிருக்கும் சில வரலாற்றுத் தரவுகளைத் தந்துதவிய ஜெனரிக் சேயோன் (பற்றிக்கோண்) அங்கிள் - அல்பேர்ட்டா மற்றும் அல்வின் அங்கிள் - மொன்றியல் ஆகிய இருவருக்கும் எனது இதயபூர்வமான நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தகவல்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
இங்ஙனம் அன்புடன்,
றோய் விக்னராஜா.