ஒன்று கூடல் 2025
எமது அன்பிற்கினிய பாசையூர் மக்களுக்கு வணக்கம், எதிர்வரும் சனிக்கிழமை ஜூலை 5ஆம் தேதி எமது ஊர் மக்களுக்கான வருடாந்த ஒன்று கூடல் நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெற இருக்கிறது என்பதை மிகுந்த பெருமையுடன் அறிய தருகின்றோம்.
இந்த நிகழ்வில் சிறியோர் பெரியோருக்கான விளையாட்டுப் போட்டிகள் பாட்டுக்கு பாட்டு,சங்கீதக் கதிரை போன்ற வினோத நிகழ்ச்சிகளுடன் வேறும் பல நிகழ்ச்சிகளும் இடம்பெறும் என்பதையும், உணவுடன் சிற்றூண்டியும் பரிமாறப்படும் என்பதையும அறியத் தருகின்றோம்.
அன்றைய நாளானது, நாமெல்லோரும் "நாங்கள் நாங்கள் நாங்களாக பாசையூர் மக்களாகத் திரட்சியுறும் நாள்" ஆகும்.
எனவே அனைவரும் இந்த வருடம் நடைபெறுவிருக்கும் இந்த ஒன்று கூடலுக்கு புத்துணர்வழித்து நாம் ஒரு தாய் மக்களாகத் தொடர்ந்து முன்னேறுவதற்கான கதவுகளை திறப்பதற்கு முன்வருவதன் மூலம் இந்நிகழ்வில் உற்சாக்துடன் கலந்து கொண்டு மகிழ்வுறுமாறு அன்புடன் வேண்டுகிறோம். 2011ம் ஆண்டு இறுதியாக எமது ஒன்றுகூடல் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள், இவ்விணையத்தளத்தின் "Events" என்ற பிரதான பட்டியல் இணைப்பினது கீழ் விழும் உப இணைப்பான "Get Together" என்ற இணை்பிற் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இப்படிக்கு
நிர்வாகத்தினர்
பாசையூர் புனித அந்தோனியார் ஒன்றியம் - கனடா