நன்றி நவிலல்
ஆனி 28 2025
அன்பார்ந்த ரொறன்ரோ வாழ் எமது பாஷையூர்; மக்கள் அனைவருக்கும் எமது வணக்கம்!
எமது பாதுகாவலராம் பதுவைப் பதியரான புனித அந்தோனியாரின் திருவிழாத் திருப்பலி மற்றும்; திருச் சுரூப பவனிஇ ஆசீர்வாதம் என்பன வழமை போல் இம்முறையும் இன்று 28.06.2025 சனிக்கிழமை மேரி லேக் திருத்தலத்திற்கு அருகில் உள்ள திரு இருதய ஆண்டவர் (Sacred Heart Church) கோயிலில் இறை ஆசீருடன் இனிதே சிறப்பாக நடைபெற்று முடிந்தது நீங்கள் அனைவரும் அறிந்ததே!
இதற்காக பல்வேறுபட்ட வழிகளிலும் எமக்கு உதவி செய்த உங்கள் அனைவரிற்கும் எமது மனமார்ந்த நன்றிகள்!!!
புனித அந்தோனியாரின் பரிந்துரையால் நீங்கள் கேட்ட வரங்களும், இறைவனின் அருளும், ஆசீர்வாதமும் உங்களுக்கும் உங்கள் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரிற்கும் தொடர்ந்தும் முழுமையாக கிடைப்பதாக!!!!
அத்துடன் மிக நீண்ட இடைவெளிக்குப்பின் வருகின்ற சனிக்கிழமை 05.07.2025 ஏற்கனவே எமது நிர்வாக சபையினால் தீர்மானிக்கப்பட்டபடி எமது சமூக அமைப்பின் ஒன்றுகூடல் Downsview Dells Park இல் நடைபெறும். இது தொடர்பான விபரங்கள் விரைவில் whatsup மூலம் உங்களுக்கு தெரியப்படுத்தப்படும்.
மீண்டும் இம்முறை எமது புனிதரின் திருவிழாவை சிறப்பிக்க எமக்கு உதவி செய்த உங்கள் அனைவரிற்கும், பாஷையூர் புனித அந்தோனியார் சமூக அமைப்பின் நிர்வாக சபையின் மூலமாக எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி
நிர்வாகம்
மேலதிக தகவல்களுக்கும் தொடர்புகளுக்கும் எமது நிர்வாக சபையை நாடவும்.
தலைவர் :- திரு. கில்பேர்ட் - 647 – 219 0892
செயலாளர் :- திரு. ஜீட் - 647 – 762 4879
பொருளாளர் :- திரு. மைக்கல் - 416 – 873 2148
பாஷையூர் புனித அந்தோனியார் சமூக அமைப்பு ரொறன்ரோ– கனடா